திருத்தணி நகரத்தில் இன்று நமது தலைவர் டாக்டர்.கலைஞர் அவர்களின் 89 வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் திரு.மாதவரம் எஸ்.சுதர்சனம்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.ஆ.கிருஷ்ணசாமி,திருத்தணி அருள்மிகு சுபிரமணிய சுவாமி திருக்கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அண்ணன் திரு.மு.ஈஸ்வரப்பன் ,தலைமை கழக வழக்கறிஞர் அண்ணன் திரு.இ.பரந்தாமன்,மாநில மாணவரணி துணை அமைப்பாளரும் சட்டமன்ற உறுப்பினரும் நமது தலைமைக்கழக பேச்சாளருமான அண்ணன் திரு.கோவி.செழியன் ,தலைமை கழக பேச்சாளர்கள் அண்ணன் திரு.குடியாத்தம்.குமரன் மற்றும் முரசொலி மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.....கூட்டத்தில் திருத்தணி நகர கழகம் சார்பாக நகர செயலாளர் திரு.எஸ்.சந்திரன், மாவட்ட பிரதிநிதி அண்ணன் திரு.பூபதி , முன்னாள் நகர செயலாளர் அண்ணன் திரு.மு.நாகன் ஆகியோர் மற்றும் நமது கழக இளைஞர் அணி மாணவர் அணி,மகளிர் அணி,தொண்டர் அணி,மற்றும் நமது கழக கவுன்சிலர்களும்,முன்னோடிகளும் கலந்துகொண்டனர்.........
No comments:
Post a Comment