வாரணாசியில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி!

உ.பி., மாநிலம் வாரணாசி அடுத்த மத விழா ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் பலியாகி உள்ளனர்.
வாரணாசி அருகே உள்ள முகல்சாராய் பகுதியில் ராஜ்காட் பாலத்தின் மீது மத விழா ஒன்றின் ஊர்வலம் நடந்துள்ளது. குறுகிய பாலத்தில் நடந்த ஊர்வலத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும் 22 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment