மத்திய பிரதேச மாநிலத்தில் 40 பேர் பயணித்த தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் நமலி நகரில் தனியார் பஸ் ஒன்று 40 பேருடன் ஜோராவிலிருந்து ரட்லம் நோக்கி சென்று கொண்டிருந்தது. 12 பத்தார் காதன் நான்கு வழிச்சாலையில் வேகமாக சென்ற பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர், சாலையின் ஓரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி குளம் போல் இருந்தது.
இதனால், பயணித்தவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பஸ்சிலிருந்தவர்கள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்டனர். இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 13 படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment