ஏமனில் தவித்த இந்தியர்களை மட்டுமின்றி, பாகிஸ்தானியர்களையும் இந்திய ராணுவம் மீ்ட்டதாக பிரதமர் மோடி பேசினார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில், போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவிடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: மனிதநேயத்திற்கு பெயர் பெற்றது இந்திய ராணுவம். மக்களுக்கு உதவ ராணுவம் தயார் நிலையில் உள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஸ்ரீநகரில் மக்களை மீட்ட ராணுவத்தின் பணி மகத்தானது. உதவி செய்யும்போது கூட கல் எறிவார்கள் என்பதை நினைத்து பார்க்கவில்லை. உதவி தேவைப்பட்டவர்களுக்கு ராணுவம் உதவி செய்துள்ளது. ராணுவம் எப்போதும் வேறுபாடு காட்டியதில்லை. அமைதி நடவடிக்கையி்ல ராணுவத்தின் பங்கு சிறப்பானது.
2014 வெள்ளத்தின் போது ராணுவத்தின் பெருமை வெளிப்பட்டது. ஏமனில் தவித்த இந்தியர்களை மட்டுமல்லாமல் பாகிஸ்தானியர்களையும் நமது ராணுவம் மீட்டது. மக்களுக்கு உதவ ராணுவம் தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு இந்தியரும் ராணுவத்திற்கு சமம். உலகிற்கே ராணுவ வீரர்கள் உதாரணமாக திகழ்கின்றனர். நமது பாதுகாப்பிற்கு ராணுவ வீரர்கள் தங்களது வாழ்க்கையை தியாகம் செய்துள்ளனர். நமது வீரர்களின் மிகப்பெரிய ஆயுதம் சுயக்கட்டுப்பாடு. வீரர்களின் சீருடை மற்றும் வீரத்தை மட்டும் நினைக்காமல் மனிதத்தன்மையை நினைவு கூற வேண்டும். ராணுவம் தனது செயல் குறித்து எப்போதும் பேசாது; நடவடிக்கையில் காட்டும். வீரர்கள் எல்லையை காக்க உயிரை பணயம் வைத்து போராடுகின்றனர். ஒன் ரேங்க் ஒன் பென்சன் திட்டத்திற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதில் முந்தைய அரசு பொய் வாக்குறுதி அளித்தது எனக்கூறினார்.

No comments:
Post a Comment