சட்டசபை தேர்தலுக்கு பின்னரே யார் முதல்வர் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறினார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக முலாயமின் மகன் அகிலேஷ் உள்ளார். அவருக்கும், அவரது சித்தப்பாவும் மூத்த அமைச்சருமான ஷிவ்பால் யாதவுக்கும் இடையே மோதல் வெடித்தது. அவரது ஆதரவாளர்கள் சிலர் பதவியிறக்கம் செய்யப்பட்டனர். பதவி பறிக்கப்பட்டன. இதற்கு பதிலடியாக அகிலேஷின் மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டது. விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமாஜ்வாடியில் ஏற்பட்ட இந்த மோதல் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இதில் தலையிட்ட கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், லக்னோவில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த முலாயம் சிங் யாதவ், சட்டசபை தேர்தலுக்கு பின்னரே முடிவு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் எம்.எல்.ஏ.,க்களும் கட்சியின் பார்லிமென்ட் குழு உறுப்பினர்களுமே முதல்வரை தேர்வு செய்வார்கள். கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. பிளவும் இல்லை. குடும்பத்திலும் எந்த பிரிவும் இல்லை. சிவில் சட்டம் குறித்து மதத்தலைவர்களின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும் எனக்கூறினார்.

No comments:
Post a Comment