தீபாவளிக்கு 21,289 சிறப்பு பஸ்கள்: பஸ் ஸ்டாண்டுகள் மாற்றம்

சென்னை: தீபாவளியை முன்னிட்டு, 21,289 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் இதர பகுதிகளிலிருந்து அக்., 26, 27 மற்றும் 28 ம் தேதிகளில் 10,064 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 26, 27 மற்றும் 28 ம் தேதிகளில் 11, 225 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
ஆந்திரா செல்லும் அனைத்து பஸ்களும் அண்ணாநகர் மேற்கு பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும். புதுவை கடலூர், சிதம்பரம், செல்லும் பஸ்கள் மாநில தேர்தல் ஆணையம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். திண்டிவனம், கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் தாம்பரம் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி செல்லும் பஸ்கள் பூவிருந்தவல்லி பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும். இதர ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment