புதுடில்லி : கடலுக்கு அடியில் திருமணம் செய்வது, ஆகாயத்தில் பறந்து திருமணம் செய்வது உள்ளிட்ட பல்வேறு முறைகளில் உலகம் முழுவதும் பெரும்பாலோனோர் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா போல திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் திட்டமொன்றை ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.அதன்படி இந்தியாவின் ஆடம்பர சொகுசு ரயிலான மகாராஜாவை 8 நாட்கள் திருமணச் சுற்றுலாவிற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த ரயிலில் மொத்தம் 88 பயணிகள் பயணிக்கலாம். 24 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 43 விருந்தினர் அறைகள் உள்ளன. இதில் 20 டீலக்ஸ், 18 ஜூனியர் சூட்கள், 4 சூட்கள் மற்றும் ஒரு பிரசிடென்சியல் சூட் உள்ளிட்டவையும் அடங்கும். இந்த எட்டு நாட்கள் திருமண சுற்றுலாவிற்கு மொத்தம் 5.5 கோடி ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருமணம் தவிர பாலிவுட் சினிமா சூட்டிங், பேஷன் நிகழ்ச்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மகாராஜா ரயிலில் நடத்திக்கொள்ளும் வசதியையும் அறிமுகம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்துள்ளது. இந்த தகவலை ஐ.ஆர்.சி.டி.சி.யின் மேற்கு மண்டல செய்தி தொடர்பாளர் பினாகின் மோரவாலா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment