முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை!!

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, வதந்தி பரப்புவோர் மீது
நடவடிக்கை எடுக்க, சமூக வலைதளங்களை, தமிழக போலீஸ் கண்காணித்து வருகிறது. இதற்கான சிறப்புக் குழு, ஏற்கனவே நான்கு பேரை கைது செய்துள்ள நிலையில், புளுகு மூட்டையை அவிழ்த்து விட்ட, 48 பேரை பிடிக்கும் வேட்டையும் தீவிரமாகி உள்ளது.
சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதா வின் உடல்நிலை குறித்து, சமூக வலைதளங் களில், விஷமிகள் சிலர் வதந்தி பரப்பி வரு கின்றனர். வதந்தி பரப்புவோரை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக மத்திய குற்றப்பிரிவின்,சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
அதற்காக, கணினி வழி குற்றங்களை கண்டு பிடிப்பதில், திறமை வாய்ந்த போலீசார் மற்றும் நிபுணர்கள் இடம் பெற்ற சிறப்புக் குழு அமைக் கப்பட்டு உள்ளது. இக்குழுவினர், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தெரிவித்த தகவல்படி, முதல்வர் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பிய, 52 பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில், நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டதில், மீதமுள்ள, 48 பேரை பிடிக்க, தனிப் படை போலீசார், மாநிலத்தின் பல பகுதிகளுக் கும் விரைந்துள்ளனர். இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
முதல்வரின் உடல்நிலை குறித்து, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய, நாமக்கல் மாவட்டம், தேவனாங்குறிச்சியைச் சேர்ந்த, மென்பொறியாளர் சதீஷ்குமார்; மதுரை, பாண்டியன் நகரைச் சேர்ந்த, ஐ.டி.ஐ., படித்துள்ள மாடசாமி என்ற இருவர்,ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்தனர். இந்நிலையில், சென்னை, பம்மல், எல்.ஐ.ஜி., காலனியைச் சேர்ந்த, பி.காம்., பட்டதாரி பாலசுந்தரம், 42; துாத்துக்குடி மாவட்டம், வேப்பலோடையைச் சேர்ந்த, வங்கி ஊழியர் செல்வம், 28, ஆகிய இருவரும், நேற்று கைது செய்யப்பட்டனர். பாலசுந்தரம், தனியார் நிறுவனம் ஒன்றில், கணக்காளராக வேலை பார்த்து வந்தான்.
இவர்கள் மீது, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையிலான, சட்டப் பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளது. வதந்தி பரப்பிய, மேலும், 48 பேரை தேடி வருகிறோம். சமூக வலைதளங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். சமூக வலைதளத்தில், நேரடியாக வதந்தி பரப்புவோர் மட்டுமின்றி, வதந்திக்கு லைக் போடுவோர், அதை பிறருக்கு, பார்வர்டு செய்வோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment