
மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகை அக்டோபர் 30க்கு முன்னர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சம்பள விகிதம் மாற்றியமைக்கப்பட்ட பின்னரும், சிவில் சர்வீஸ் ஊழியர்கள் போல், முப்படை வீரர்களுக்கு ‛அரியர்' வழங்கப்படவில்லை. சம்பள கமிஷன் பரிந்துரையில், உள்ள முரண்பாடுகளை மாற்றியமைக்க வேண்டும் என முப்படை தளபதிகள் வலியுறுத்தியுள்ளனர். பென்சன் உள்ளிட்ட பலவற்றில் உள்ள முரண்பாடுகளை நீக்காத வரையில் சம்பள கமிஷன் பரிந்துரை அமல்படுத்தக்கூடாது என முப்படை தளபதிகள் கூறியுள்ளனர். பண்டிகை காலத்திற்கு முன் பணம் கிடைக்காதது முன்னாள் மற்றும் பணியில் உள்ள முப்படை வீரர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. முப்படை வீரர்களுக்கு முன்பணம் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், முப்படை வீரர்களுக்கு 10 சதவீத அரியர் தொகையை வழங்க தற்காலிக அடிப்படையில் ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு 10 சதவீத அரியர் தொகை வழங்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் முப்படை வீரர்களுக்கு ஒரு மாத சம்பளம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகையை அக்டோபர் 30க்குள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
No comments:
Post a Comment