தனித்து போட்டியிடுங்க...!' : பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: ''உள்ளாட்சி தேர்தலில், அனைத்து கட்சிகளும், தனித்து போட்டியிட வேண்டும்,'' என, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தல் குறித்து, தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர், தங்கள் கட்சி மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். அதில், 99 சதவீதம் பேர், 'தனித்து போட்டியிடலாம்' என, கூறியுள்ளனர்.
இது, அவர்களது கட்சி விவகாரம் என்றாலும், அந்த கருத்து வரவேற்கத்தக்கதே. இதையே, துவக்கத்தில் இருந்து, நானும் வலியுறுத்தி வருகிறேன். அனைத்து கட்சிகளும், தங்கள் சுய பலத்தை நிரூபிக்க, உள்ளாட்சி தேர்தலில், தனித்து போட்டியிட வேண்டும்.தேசிய நதிநீர் கட்டுப்பாட்டு மசோதாவை, மத்திய அரசு விரைவில் கொண்டு வரும். காவிரி பிரச்னையில், தமிழக விவசாயிகளுக்கு, மத்திய அரசு ஒரு போதும் துரோகம் செய்யாது. தமிழக மக்கள் நலன் கருதி, குளச்சலில் வர்த்தக துறைமுகம் கட்டாயம் கொண்டு வரப்படும்.இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

No comments:

Post a Comment