முதல்வர் உடல்நிலை குறித்து அவதூறு: மேலும் 2 பேர் கைது.

முதல்வர் ஜெ., உடல்நிலை குறித்து அவதூறாக பேசியதாக மேலும் இரண்டு பேர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதா வின் உடல்நிலை குறித்து, சமூக வலைதளங் களில், விஷமிகள் சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். வதந்தி பரப்புவோரை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக மத்திய குற்றப்பிரிவின்சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதற்காக, கணினி வழி குற்றங்களை கண்டு பிடிப்பதில், திறமை வாய்ந்த போலீசார் மற்றும் நிபுணர்கள் இடம் பெற்ற சிறப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தெரிவித்த தகவல்படி, முதல்வர் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பிய, 52 பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில், நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டதில், மீதமுள்ள, 48 பேரை பிடிக்க, தனிப்படை போலீசார், மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விரைந்துள்ளனர்.
இந்நிலையில், கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த புனிதா தேவி என்பவர் போலீசில் அளித்த புகார்: கடந்த வாரம் கனரா வங்கிக்கு சென்ற போது, வங்கி ஊழியர்கள் ரமேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் வாட்ஸ் அப்பில் வந்த முதல்வர் உடல்நிலை குறித்து அவதூறாக பேசி சிரித்தனர் எனக்கூறியிருந்தார். இதனையடுத்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

No comments:

Post a Comment